மலைவாழ் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ஏற்பாட்டில், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் பண்ணை வளாகத்தில் முதல் முறையாக அதிகளவில் லாபம் தரும் 250 ரப்பர் மரங்கள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இந்திய ரப்பர் வாரியத்தின் ஆராய்ச்சி இணை இயக்குநர் முகமது சாதிக், நடப்பட்ட ரப்பர் மரங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு பயன் தரும். ஒரு ஹெக்டேருக்கு சுமார் ரூபாய் 2 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஏற்காட்டின் உயரம் மற்றும் தட்பவெப்பநிலை ரப்பர் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.



