ட்ரெண்டிங்

கனசதுரத்தில் தேசியக் கொடியை வடிவமைத்து அசத்தும் சிறுவன்!

 

கனசதுரத்தில் தேசியக் கொடியை நொடி பொழுதில் உருவாக்கி மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். 

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள ராமன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரசன்னாவின் மகன் அஸ்வின். இவர் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். தனது மகன் கனசதுரம் விளையாடுவதில் ஆர்வம் உள்ளதைப் புரிந்துக் கொண்ட தந்தை பிரசன்னா, நமது நாட்டின் தேசியக் கொடியை உருவாக்கியதில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளையும் வடிவமைக்க தேவையானப் பயிற்சியைக் கொடுத்துள்ளார். 

 

இதன் காரணமாக, மாணவன் அஸ்வின், 24 நாடுகளின் தேசியக் கொடிகளையும் மிகக்குறைந்த நேரத்தில் கனசதுரத்தில் வடிவமைத்து அசத்தி வருகிறார். மாணவரின் திறமையைச் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்களும், விளையாட்டு வீரர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.