ட்ரெண்டிங்

கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது!

 

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பேரூராட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கால்நடை வாரச்சந்தைகே கூடுவது வழக்கம். இச்சந்தைக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகளும், வியாபாரிகளும், ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தும், வாங்கியும் செல்கின்றனர். 

 

அதன் தொடர்ச்சியாக, இன்று (பிப்.03) கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு 5,000 ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். 5,000 ஆடுகள் விற்பனைக்காக வந்திருந்த நிலையில் 3,500 ஆடுகள் விற்பனையானது. ஆடு ஒன்று அதன் எடைக்கு தகுந்தார் போல் சராசரியாக ரூபாய் 5,000 முதல் ரூபாய் 20,000 வரை விலை போனது. 

 

இன்று மட்டும் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 3,500 ஆடுகள் ரூபாய் 5 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.