சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனவாசியில் நங்கவள்ளி வடக்கு, தெற்கு ஒன்றியம், வனவாசி பேரூராட்சி சார்பில் அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று (அக்.23) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நான் கனவு காண்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார்; ஆனால் அவர் தான் பகல் கனவு காண்கிறார்; மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சரிவும் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிக் கொள்கிறார்.
குடும்பத்தில் உள்ளவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக தி.மு.க. கூட்டணி அமைக்கிறது. கருணாநிதிக்கு பின் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார்; உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராகியுள்ளார். பொய்யை பொருந்துவது போல் கூறினால் உண்மை திருதிருவென விழிக்குமாம்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தேசிய கட்சி கேட்டது; வலிமையான கட்சியான அ.தி.மு.க. பூத்துக் குலுங்கும் மலர் போன்றது; மலராக அ.தி.மு.க. பூத்துக் குலுங்க கூட்டணிக் கட்சிகள் தேனீக்களாய் வரும் எனத் தெரிவித்துள்ளார்.



-hcTFAGMRGb.jpg)