நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் கண்டெய்னர் லாரியை விரட்டி பிடித்தது எப்படி? என்று சேலம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. உமா, செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கம் அளித்தார்.
அப்போது, சேலம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. உமா தெரிவித்ததாவது, கற்களை வீசி போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; தப்பிச் சென்ற இருவரில் ஜூமான் என்பவர் போலீசாரைத் தாக்கியதால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். பணப்பையுடன் ஓடிய அஸ்ரூவை காலில் சுட்டுப்பிடித்தோம்; எவ்வளவு பணம் என்பது கணக்கிடவில்லை. பிடிக்கப்பட்ட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சூரில் கொள்ளை சம்பவம் நடந்த பிறகு மேற்கு மண்டலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறி வைத்து பார்த்து நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை; கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்பது விசாரணைக்கு பின் தெரியும். கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளையில் ஏற்கனவே கைதானவர்களும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.
மற்றொருவரான அசார் அலி என்பவரை காவல்துறையினர் காலில் சுட்டுப்பிடித்தனர்; விசாரணையின் முடிவில் முழு விவரங்களும் தெரிய வரும். சம்பந்தப்பட்ட லாரி வழக்கமாக வந்து செல்லும் பதிவுச் செய்யப்பட்ட வாகனம் தான் எனத் தெரிவித்துள்ளார்.

-G65tcuNaPU.jpeg )
-SXgDfGgJfO.jpg)