சேலம் மாவட்டம், மேட்டூர், தின்னப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்களம் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. நேற்று (செப்.25) இரவு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம், மேட்டூர், தின்னப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதும், கால்நடைகளை சேதப்படுத்துவதும் வனத்துறையால் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட வனத்துறை அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு, சிறுத்தையை கண்காணித்து பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, மேட்டூர் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க 6 கூண்டுகள் வைத்தும், 16 கண்காணிப்புப் கேமராக்கள், 3 டிரோன் கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வனத்துறையின் சார்பில் 80 வனத்துறையினர் இரவு, பகல் என 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்துள்ள தின்னப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்களம் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அப்போது சிறுத்தையின் நடமாட்டம் குறித்தும், சிறுத்தையைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் வனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.


-SXgDfGgJfO.jpg)