ட்ரெண்டிங்

தமிழகத்தில் ஜூன் 06- ல் பள்ளிகள் திறப்பு! 

தமிழகத்தில் வரும் ஜூன் 06- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் ஜூன் 06- ஆம் தேதி திறக்கப்படும்; 2024- 25ம் கல்வியாண்டில் 1- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 06- ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். பள்ளிகளைத் திறக்க ஏதுவாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். 

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 04- ஆம் தேதி நடந்து முடிந்த பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.