சேலம் மாவட்ட தீயணைப்புத் துறையினர் சார்பில் சேலம் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தீ விபத்துகளைத் தடுக்கும் விதமான நடைமுறைகள், அவசர சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்,குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
சேலம் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடிப்படை தீ தடுப்பு நடைமுறை தீ அணைப்பு கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து காட்சியுடன் விளக்கம் அளித்தனர்.
மேலும், எதிர்வரும் தீபாவளி பண்டிகை நாள்களில் மக்கள் தீவிபத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் சிறப்பாக எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தீ தடுப்பு குறித்து பயிற்சி பெற்றனர்.


