ட்ரெண்டிங்

மாணவர்களை விரைவில் சந்திக்கிறார் நடிகர் விஜய்! 

தமிழகம், புதுச்சேரியில் பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்! என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அரசியாக கட்சித் தொடங்கிய பின் மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு நடிகர் விஜய் பரிசுகளை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.