ட்ரெண்டிங்

செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

சட்டவிரோதப பணபரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்.26) நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியுள்ளது. 

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

வாரத்தில் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும். சாட்சிகளைக் கலைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது. விசாரணை கைதியாகவே இருப்பதால் அடிப்படை உரிமை கருதி நிபந்தனை பிணை வழங்கப்பட்டது. 

ரூபாய் 25 லட்சத்திற்கு இருநபர்கள் உத்தரவாதம் வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ளது; எனினும், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.