சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, ரூ.20 லட்சம் மதிப்பில் முழு உடல் பரிசோதனை செய்யக்கூடிய டெக்ஸா ஸ்கேன் கருவி நிறுவப்பட உள்ளது.
இந்த நவீன கருவி மூலம் தலை முதல் பாதம் வரை உடலின் அனைத்து உறுப்புகளையும் முழுமையாக ஸ்கேன் செய்யும் வசதி கிடைக்கிறது. மேலும், அதிநவீன மென்பொருள் இணைக்கப்பட்டிருப்பதால் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து தர முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் முக்கிய மருத்துவமனையாக இருந்து வருகிறது. எனவே, இந்த புதிய வசதி சேலம் மட்டுமில்லாது சேலத்தை சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் உள்ளது
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாவது:
அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் முக்கியமாக, டெக்ஸா ஸ்கேன் கருவி நிறுவப்படுவதால் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் துல்லியமான பரிசோதனை செய்து விரைவான மருத்துவம் கிடைக்கும்,என தெரிவித்தனர்.

-(8)-UDeeDsqiGc.jpg )
