ட்ரெண்டிங்

3 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

யஷ்வந்த்பூர்- சேலம் முன்பதிவில்லா ரயில் சேவை இருமார்க்கத்திலும், கொச்சுவேலி- கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யஷ்வந்த்பூர்- சேலம் முன்பதிவில்லா ரயில் சேவை (ரயில் எண் 16211) இன்றும் (டிச.19), சேலம்- யஷ்வந்த்பூர் முன்பதிவில்லா ரயில் சேவை (ரயில் எண் 16212) நாளையும் (டிச.20) ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்,ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் கொச்சுவேலி- கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை (ரயில் எண் 12512) நாளை (டிச.20) ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவுச் செய்தப் பயணிகளுக்கு முழுக் கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.