ட்ரெண்டிங்

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் அக்டோபர் 07- ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் அக்.02- ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காலாண்டு விடுமுறை முடிந்து வரும் அக்.07- ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

காலாண்டு விடுமுறை நீட்டிப்பால், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.