ட்ரெண்டிங்

தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழு- காங்கிரஸ் அறிவிப்பு!

 

தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் தேர்தல் குழுவைக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

 

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான தேர்தல் குழுவில், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குமரி ஆனந்தன், மணிசங்கர் ஐயர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாக்கூர், விஜய் வசந்த், ப.சிதம்பரம் மற்றும் தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன் நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட 31 பேர் தேர்தல் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.