ட்ரெண்டிங்

செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி மனு!

சேலம் மாவட்டம், கருப்பூரில் அமைந்துள்ளது பெரியார் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் சர்ச்சைக்கு பெயர் போனது. 

 

இப்பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100- க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைவுப் பெற்றுள்ளனர். 

 

இந்த சூழலில், மாணவ, மாணவிகளுக்கு பேரிடியாக, செமஸ்டர் தேர்வு கட்டணத்தை உயர்த்தி பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அறிவித்திருந்தது. 

 

செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினர், கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

 

அதன் தொடர்ச்சியாக, பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கானசெமஸ்டர் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு பா.ம.க.வின் மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் விஜயராசா தலைமையிலான நிர்வாகிகள் இன்று (செப்.24) காலை 10.00 மணிக்கு மனு அளித்தனர்