சேலம்:
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக உருவாகியிருந்த சக்திவாய்ந்த புயல் தற்போது தெற்குத் திசை நோக்கி நகர்ந்து வலுகுறைந்த புயலாக மாறியுள்ளது. இதனால்,அதன் சுற்றுப்பகுதிகளில் வானிலை மாறுபாடுகள் நிலவி வருகின்றன.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், இந்த புயல் மண்டலம் மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகிலுள்ள மாவட்டங்களிலும், சேலம் மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடிய சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக,இன்று ( அக்.07 )(செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வந்த நிலையில், இன்றைய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால். விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் . குறிப்பாக, மலைப் பகுதிகள், ஆறு கரைகள் மற்றும் குறைந்த உயரப்பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையினால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் போன்ற சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


