ட்ரெண்டிங்

காலை உணவுத் திட்டம் - துவக்கப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு!

காலை உணவுத் திட்டம் - துவக்கப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு! 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், ரெங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட வளர்ச்சிக் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை இ.ஆ.ப., மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ இ.ஆ.ப. மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.