ட்ரெண்டிங்

சேலம் வழியாக ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! 

சேலம் வழியாக ராஜஸ்தானின் பகத் கி கோதிக்கு சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே. 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் மே 23- ஆம் தேதி வரை கோவையில் ருந்து பகத் கி கோதிக்கும், ஏப்ரல் 14- ஆம் தேதியில் இருந்து மே 26- ஆம் தேதி வரை பகத் கி கோதியில் இருந்து கோவைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 

இந்த சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கச்சிக்கடா, சூரத், அகமதாபாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.