ட்ரெண்டிங்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. 

கடந்த ஜூலை மாதம் 13- ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும்குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. 90 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வை சுமார் 1.59 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதிப் பெறுவார்கள். 

தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளப் பக்கத்திற்கு சென்று தேர்வர்கள் அறிந்துக் கொள்ளலாம். குரூப் 1 முதன்மைத் தேர்வு வரும் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 13- ஆம் தேதி வரை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.