தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் ஆ.அண்ணாதுரை, முதலமைச்சர் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சமூக நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி வழங்கி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்க்கு தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் சார்பில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

-(8)-w05T32aqKs.jpg )

