டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதில், குரூப் 2 ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வுக்கு வரும் செப்டம்பர் 28- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இன்று முதல் வரும் செப்டம்பர் 28- ஆம் தேதி வரை தொழில்நுட்பப் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் பிழைகளைத் திருத்த வரும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 4 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
105 பணியிடங்களை நிரப்புதற்காக நவம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யின் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தொழில்நுட்ப பணிக்கான ஆட்கள் தேர்வுச் செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-zvbPcX69uV.jpg )
