பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்ட பணம் கொடுத்த ஆசிரியரிடம் மோசடி செய்த இன்ஜினியர்.
சேலம் மாவட்டம் அழகாபுரம் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி கணித ஆசிரியர் வின்சென்ட் தெ பவுல் (58) என்பவரின் வீடு ஒப்பந்த அடிப்படையில் புதிதாக கட்ட இடிக்கப்பட்டது.
புதிய வீடு கட்ட புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த இன்ஜினியர் எடிசன் ரெனால்ட் ஜவகர் (39) அணுகி ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்காக, ஆசிரியர் வின்சென்ட் தெ பவுலிடம் இருந்து இன்ஜினியர் எடிசன் ரெனால்ட் ஜவகர் ரூ.89.23 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டார். ஆனால், ஒப்பந்தப்படி வீடு கட்டித் தராமல் கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆசிரியர்,வின்சென்ட் தெ பவுலின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் வீடு கட்டி தருவதாக பணம் வாங்கியவர் மீது குற்றச்சாட்டு உறுதியாகிய நிலையில் இன்ஜினியர் எடிசன் ரெனால்ட் ஜவகர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தன்னுடைய பணத்தை மீட்டுத் தருமாறு ஆசிரியர் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



