ட்ரெண்டிங்

முழு நேர குடிமகன்கள் கூட யாரும் இல்லை - கமல்ஹாசன் ஆவேசம்!

முழு நேர குடிமகன்கள் கூட யாரும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7- ம் ஆண்டு தொடக்க விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.21) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், கட்சியின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், எனது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது; இனி அழுத்தமாக நடைபோடுவோம். 90,000 பேர் ஓட்டு போடாததால் நான் கோவையில் தோற்றேன். முழு நேர குடிமகன்கள் கூட யாரும் இல்லை; 40 சதவீதம் பேர் வாக்களிப்பதில்லை. தேசத்தின் குடியுரிமையே ஆட்டம் கண்டுள்ளது.

முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை; முழு நேர அப்பனும் இல்லை; பிள்ளையும் இல்லை. நான் கோவத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல; சோகத்தில் அரசியலுக்கு வந்தவன். என்னை அரசியலுக்கு வர வைப்பது கடினம் என்றார்கள்; என்னை வெளியேற்றுவது அதை விடக் கடினம்.

படையெடுத்து வரும் எதிரிகளுக்கு என்ன வரவேற்பு கொடுப்பார்களோ அது டெல்லியில் நடக்கிறது. விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்த 10% கூட மத்திய அரசு செய்யவில்லை என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.