ட்ரெண்டிங்

பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன்....மிகுந்த எதிர்பார்ப்பில் சேலம் மக்கள்! 

மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி இந்திய நேரப்படி இன்று (ஆகஸ்ட் 28) இரவு 08.00 மணிக்கு பாரிஸில் தொடங்குகிறது.

வரும் செப்.08 வரை நடக்கும் போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பாரா ஒலிம்பிக்கில் மொத்தம் 22 விளையாட்டுகளில் 549 போட்டிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் பங்கேற்கின்றனர்.

குறிப்பாக, தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் துளசிமதி, நித்ய ஸ்ரீசிவன், சிவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். வில்வித்தை, தடகளம், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட 12 விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், கடந்த 2016- ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், 2020- ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தியுள்ள நிலையில், நடப்பு பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக பதக்கம் வென்று அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர் சேலம் மாவட்ட மக்கள்.