ட்ரெண்டிங்

சேலம் உழவர் சந்தைகளில் களைக்கட்டிய காய்கறிகள், பழங்களின் விற்பனை!

சேலம் உழவர் சந்தைகளில் களைக்கட்டிய காய்கறிகள், பழங்களின் விற்பனை! 

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. 

விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைச்சல் அடைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், வாழை இலைகள் உள்ளிட்டவைகளை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு நேரடி விற்பனை செய்து வருகின்றனர். 

விலைக்கு குறைவாக இருக்கும் என்பதால், பண்டிகைகள் நாட்கள், அமாவாசை நாட்களில் உழவர் சந்தைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 16) ஆடி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், கீரைகளின் விற்பனை களைகட்டியது என்றே கூறலாம். 

நேற்று (ஆகஸ்ட் 16) ஒரே நாளில் 221 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வந்ததாகவும், ரூபாய் 78.99 லட்சத்துக்கு விற்பனையானதாகவும் சேலம் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக, நேற்றைய தினம் உழவர் சந்தைகளில் அகத்திக்கீரை, வாழை இலை, வாழைப்பழம், பூசணிக்காய், கத்தரிக்காய், அவரைக்காய், பூசணிக்காய் மற்றும் பூக்கள் அதிகளவில் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.