பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிறப்பு பேருந்துகள் இன்று (ஜன.10) முதல் ஜன.14- ஆம் தேதி வரையும், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுஊர் திரும்ப வசதியாக ஜன.16- ஆம் தேதி முதல் ஜன.20- ஆம் தேதி வரையில் பல்வேறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு மற்றும் டைடல் பார்க் பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
எனவே, பயணிகள் இந்த சிறப்பு பேருந்தைப் பயன்படுத்தி கூட்ட நெரிசலைத் தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.


