ரோட்டரி கிளப் ஆப் சேலம் ஜிம்கானா சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு விவசாயிகளுக்கு பட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் சிவசுந்தரம் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆளுநர் வசுமதி, தலைவர் காமராஜ் பிள்ளை, செயலாளர் சுரேஷ் பாபு ,பொருளாளர் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் பல வருடங்களாக சிறப்பான முறையில் விவசாயம் செய்து வரும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் காய்கறிகள் மழையில் நனைந்து வீணாக கூடாது என்பதற்காக பாதுகாத்திடும் வகையில் தார்பாய்களும் வழங்கப்பட்டது இதில் திரளான விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.

-KYTcp51rBc.jpeg )
-SXgDfGgJfO.jpg)