ட்ரெண்டிங்

த.வெ.க.வின் கொடியை ஏற்றி வைத்த விஜய்! 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலைய செயலகத்தில் ஏற்றி வைத்தார். 

கொடியை ஏற்றி வைத்த பின் கட்சிப் பாடலை பார்த்த போது விஜய் உணர்ச்சி வசப்பட்டார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 'தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பிறக்குது' எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டது. 

மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது என்ற வரிகளில் பாடல் வெளியாகியுள்ளது. அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி; இது ஆளப்போற தமிழன் கொடி வரியும் இடம் பெற்றுள்ளது.