சேலம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC மூலம் பதிவினை மேற்கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம்-2013-ன் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் தொடர்பான e-KYC பதிவானது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி படிப்பு முறையில் நியாயவிலைக்கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், PHH குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களில் 3,55,694 குடும்ப உறுப்பினர்களும், AAY குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களில் 63,531 குடும்ப உறுப்பினர்களும், தங்களது e-KYC பதிவினை நாளதுவரை மேற்கொள்ளாமல் உள்ளனர்.
எனவே, e-KYC பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடையிலும், வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் நபர்கள் தாம் வசிக்கும் பகுதியின் அருகாமையிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று IMPDS, e-KYC மூலம் வரும் மார்ச் 25- ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)