ட்ரெண்டிங்

சேலம் கோட்ட போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பணியிட மாற்றம்! 

தமிழகத்தில் 5 கோட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களைப் பணியிட மாற்றம் செய்து போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, சேலம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த இளங்கோவன், சேலம் கோட்டப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன கூடுதல் இயக்குனர் தசரதன், திருநெல்வேலி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளார்.