ட்ரெண்டிங்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடங்கியது! 

தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தொடங்கியது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். www.tnmedicalselection.net, tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகள் வரும் ஆகஸ்ட் 08- ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2024- 25 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். அகில இந்திய அளவில் மருத்துவ கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 14- ல் தொடங்கும் நிலையில், தமிழகத்திற்கு வரும் ஆகஸ்ட் 21 முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 

மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 19- ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முதலில் நடக்கிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,050 மருத்துவ இடங்கள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.