ட்ரெண்டிங்

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூலை 30) காலை 08.00 மணியளவில் 118.840 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டும் என்றும், அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் 75,000 கனஅடி முதல் 1,25,000 கனஅடி வரை எந்நேரத்திலும் திறந்து விடப்படலாம் என்றும், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், இது தொடர்பான கடிதம் நீர்வளத்துறை அதிகாரிகள், 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.