ட்ரெண்டிங்

7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்திருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இன்று (அக்.04) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35.38 அடியில் இருந்து 34.42 அடியாகக் குறைந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 09.39 டி.எம்.சி.யாக இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,560 கனஅடியில் இருந்து 1,514 கனஅடியாகக் குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக, அணை மின்நிலையம் வழியாக வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரும், கீழ்மட்ட 5 கண் மதகு வழியாக வினாடிக்கு 3,500 கனஅடி என மொத்தமாக வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், குறுவைச் சாகுபடி செய்யும் பணியினை நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.