சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 26- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்ட ஜூலை 2024 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூலை 26 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக 2- ம் தள கூட்ட அறை எண்:215- ல் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)