சேலம் தொங்கும் பூங்கா திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான கல்விக்கடன் மேளா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி.தலைமையில் இன்று (அக்.08) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வட்டார அளவில் கல்விக்கடன் மேளாக்கள் நடத்தப்படுவதாகவும்,சேலம் மாவட்டத்தில் 2024-2025 ஆண்டில் 4.738 மாணவ,மாணவிகளுக்கு,ரூ.109 கோடி கல்விக்கடன்கள் வழக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 6,600 மாணவ,மாணவிகளுக்கு ரூ.128 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அதனடிப்படையில், இன்று நடைபெற்ற இந்த முகாமில் சேலம் கோட்டத்திற்குட்பட்ட 418 மாணாக்கர்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.16.51 கோடி கல்விக்கடனுக்கான ஆணைகள் வழக்கப்பட்டுள்ளதாகவுவம்,மீதமுள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இக்கல்விக்கடன் வழங்கும் முகாமில் ஏற்கனவே கல்விக்கடன் வேண்டி பிஎம்வித்யாலக்ஸ்மி இணையதளத்தில் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல்,மேலும் புதிதாக கல்விக்கடன் பெற விரும்புபவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் எனவும்,மாணாக்கர்கள் கல்விக்கடன் பெறுவதற்கு அனைத்து கல்லூரிகளுக்கும் PMVidyalaxmi என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு,கல்விக்கடன் பெற விரும்பும் மாணாக்கர்கள் எளிமையான முறையில் பதிவேற்றம் செய்யும் வகையில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன்,மாணவ,மாணவியர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி,தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில்,சேலம் வருவாய் கோட்டாட்சியர்,சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதுநிலை கடன் ஆலோசகர்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்,மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர்,யூனியன் பேங்க் மண்டல மேலாளர்,இந்தியன் வங்கி துணை பொது மேலாளர்,உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

-5s3nH8vCzO.jpg )
