சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பாரதி நகரிலிருந்து சோனா கல்லூரி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்...
இல்லையெனில் நீதிமன்றத்தில் நாட முடிவு ..ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்...
சேலம் ஜாகீர் அம்மா பாளையத்தில் 8000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் பிரதான சாலையாக பாரதிநகரில் இருந்து சோனா கல்லூரி யொட்டி உள்ள சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர் சுமார் 20 அடி அகலம் கொண்ட இந்த சாலை இருபுறங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி மாணவ மாணவிகள் வாகனங்களை நிறுத்திக் கொண்டும் கூட்டமாக மாணவர்கள் இருப்பதால் பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இது குறித்து பலமுறை கல்லூரி நிர்வாகத்திற்கு ஊர் மக்கள் சார்பில் எச்சரித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நல வாசிகள் பக்தர்கள் குழு மற்றும் ஊர் முக்கிய பிரமுகர் ஒருங்கிணைந்த கமிட்டி குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் முதல் கூட்டம் விஜயராகவன் நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொறியாளர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஜாகிர் அம்மாபாளையம் ஊர் பிரமுகர்கள் மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 8000க்கு மேற்பட்டோர் வசிக்கும் ஜாகிர் அம்மாபாளையம் பிரதான சாலையில் இருந்து சோனா கல்லூரி கல்லூரி பிரதான சாலையை இணைக்கும் இணைப்பு சாலையை தான் அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்
ஆனால் இந்த சாலையில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது கல்லூரி நிர்வாகம் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்துவதால் மாதத்திற்கு 20 நாட்களுக்கு மேலாக விழாக்கள் நடப்பதால் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே கல்லூரி நிர்வாகம் மாற்றுப் பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையை விரிவாக்கம் செய்து தர மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை பள்ளி மற்றும் கல்லூரிக்கு நுழைவு சாலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலை விரிவாக்கம் செய்து மாணவர்கள் பயன்படுத்த அடி பாலம் மற்றும் மேம்பாலம் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இல்லை எனில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி கல்லூரி முன்பு முற்றுகையிட்டு போராடுவது என முடிவு செய்யப்பட்டது
மேலும் கல்லூரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை அரசு ஆய்வு செய்து மீட்டெடுத்து சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடுவது என இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறும் கல்லூரி நிர்வாகம் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது இந்த நிலை தொடருமானால் பொது மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை இது குறித்து தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சருக்கும் முறைப்படி புகார் தெரிவிப்போம் என்றும் அதுவும் நடவடிக்கை இல்லையெனில் போராட்டத்தை தீவிரப் படுத்துவதுவத்தை வேறு வழியில்லை என்றும் தெரிவித்தனர்
இந்தக் கூட்டத்தில் விஜயராகவன் நகர் குடியிருப்பு நலச் சங்க நிர்வாகி நாகராஜன் மாமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னாள் மாவட்ட உறுப்பினர் கிருபாகரன் ஊர் தலைவர் மணி பொறியாளர் சீனிவாசன் மரக்கடை குமார் முருகன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்...



