ஆன்மிகம்

சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு !!!

 

சேலத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயிலில் வரும் 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கும்.அதன்படி,நடப்பாண்டு சொர்க்க வாசல் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை பகல்பத்து உற்சவம் நடக்கிறது. பகல்பத்து உற்சவத்தின் போது தினசரி மாலை 6 மணிக்கு அழகிரிநாத சுவாமி திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல்,திரு மொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராத னம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம், திருக்கொட்டா ரத்தில் பக்தி உலாவுதல், ஆஸ்தானம் எழுந்தருளல் நடக்கிறது.30ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை இராப்பத்து உற்சவம் நடக்கிறது. இராப்பத்து உற்சவத் தின்போது தினசரி இரவு 8 மணிக்கு அழகிரிநாத திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருவாய் மாழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராத னம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் நடக்கிறது.

டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது.அன்று மூலவர் பெருமாள்,தாயார்,கருடாழ்வார்,ஆஞ்சநேயர்,ஆண்டாள்,ராமானுஜர்,ராமபாதம் ஆகிய சுவாமிகளுக்கு தங்கக்கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடக்கிறது.

சொர்க்கவாசல்திறப்பை முன்னிட்டு கோட்டை பெருமாள் கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஆங்காங்கே தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. பரமபத வாசல் முழுவதும் பராமரிப்பு பணியும் நடைபெறவுள்ளது. கோயிலில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.