தமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த 9 டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல் அகாடமி துணை கண்காணிப்பாளராக யாஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளார். ஊமச்சிக்குளம் துணை காவல் கண்காணிப்பாளராக பாலசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மணிமங்கலம் சரக உதவி காவல் ஆணையராக இளஞ்செழியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு குடிமைப் பொருள் வழங்கல் சி.ஐ.டி. பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக ராஜபாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



