ட்ரெண்டிங்

தொடர் மழையால் விவசாயிகள் உருவாக்கிய ஏரி நிரம்பியது!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரத்தில் ஒருவாரமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, விவசாயிகள் உருவாக்கிய ஏரி நிரம்பியுள்ளது.

 

சேர்வராயன் மலைப் பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கிழக்கு சரபங்கா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் வனத்துறையிடம் இணைந்து உருவாக்கிய ஏரி, நிரம்பியிருப்பதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந்த ஏரியில் இருந்து அதிகபட்சமான தண்ணீர் செந்நீராக வெளியேறி, சரங்கா ஆற்றின் வழியாக காமலாபுரம் ஏரிக்கு சென்றது. வனத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியதால், வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பர் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.