ட்ரெண்டிங்

யுபிஎஸ்சி ஆணைய தலைவர் திடீர் ராஜினாமா! 

யுபிஎஸ்சி ஆணைய தலைவர் மனோஜ் சோனி, தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்தார். 

கடந்த 2017- ஆம் ஆண்டு மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக மனோஜ் சோனி பணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2023- ஆம் ஆண்டு மே மாதம் யுபிஎஸ்சி ஆணையத்தின் தலைவராக மனோஜ் சோனி பதவியேற்றுக் கொண்டார். 

இந்த சூழலில், யுபிஎஸ்சி தேர்வில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், மனோஜ் சோனி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்ததாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.