ட்ரெண்டிங்

S.I.R குளறுபடிகளை எதிர்த்து த.வெ.க ஆர்ப்பாட்டம் !!!

 

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறி,தமிழக வெற்றிக் கழகத்தினர் சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்....

எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டது.... 

மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு துறை வாகனம் மற்றும் கண்காணிப்பு கேமரா வாகனம் உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டது...

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறி, தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி சேலத்தில் சேலம் கோட்டை மைதானம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக வாக்காளர்களின் வாக்குரிமை உரிமையை இழக்கும் சூழலை ஏற்படும் என்று வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு துறை வாகனம் மற்றும் கண்காணிப்பு கேமரா வாகனம் உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டது.