யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுக்கு தயாராக ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு தலா ரூபாய் 7,500 வழங்கப்படவிருக்கிறது. நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவு வாயிலாக மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூபாய் 25,000 செலுத்தப்படும்.
ஊக்கத்தொகை பெற நடப்பாண்டில் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்று முதல் வரும் ஜூலை 28- ஆம் தேதி வரை https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


