மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடிக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், அணையில் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் தற்போதைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 25,000 கனஅடிக்கு மேல் உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் தயாள குமரன் தலைமையிலான அதிகாரிகள் அணையின் 8 மதகு பகுதி, 16 கண் மதகு பகுதி உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டூர் அணையில் பாதுகாப்பு, நீர்மட்டம் உயர்வு உள்ளிட்டவைக் குறித்து தயாள குமரன் நேரில் ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ள நிலையில், நீர்வரத்தும் அதிகரித்திருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


