ட்ரெண்டிங்

ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைச் சுற்றிபார்க்க சேலம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள பாக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலைக்கோவில், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வர். 

இந்த நிலையில், ஏற்காட்டில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்துப் பெய்து வரும் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகலில் மழையும், இரவில் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். 

அதேபோல், சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதைகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. இதனால், ஏற்காடு செல்லும் சாலையில், நீர்வீழ்ச்சியைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தும் பயணிகள், நீர்வீழ்ச்சியில் குளித்தும், செல்பி புகைப்படங்களை எடுத்தும் மகிழ்ந்தனர். 

ஏற்காட்டில் தற்போது நிலவும் சூழலை ரசிக்க சுற்றுலாப் பயணிகள், இளைஞர்கள் அங்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.