ட்ரெண்டிங்

கள்ளச்சாராய மரணத்திற்கு அரசுதான் பொறுப்பு- சீமான் ஆவேசம்! 

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிகாரிகளை மாற்றினால் மட்டும் போதுமா? நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் கைதுக்கு அழுத்தம் கொடுத்தது யார்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜனநாயகம் அல்ல; பணநாயகம் தான் வேலை செய்தது. 

தன்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து தமிழ்நாடு அரசு தனக்கு அழுத்தம் கொடுக்கிறது. காட்டுப்பள்ளியில் துறைமுகம் கட்ட நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. கள்ளச்சாராய உயிரிழப்புக்கு அதிகாரிகள் எப்படி பொறுப்பாக முடியும், அரசு தான் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, இன்று (ஜூலை 11) நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை முருகனை காவல்துறை கைது செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.