ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் பேருந்து வழித்தடம் மாற்றம் மற்றும் நீட்டிப்பு !!!

 

தமிழ்நாடு போக்குவரத்து துறை சேலம் கோட்டம் சார்பில் மலை வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் புதிய பேருந்து வழித்தடம் மாற்றம் நீட்டிப்பு சேவைகளையும் தொடங்கி வைத்தனர். 

 

இதில்,பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு,சேலம் மாவட்டத்தில் இன்று பல பேருந்து சேவைகளில் புதிய வழித்தட மாற்றங்கள் மற்றும் நீட்டிப்புகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.

புதிய மாற்றப்பட்ட பேருந்து சேவைகள்:

எடப்பாடி,சங்ககிரி, திருச்செங்கோடு வழியாக இயக்கப்பட்ட பேருந்து, இப்போது ஜலகண்டாபுரம் சித்திரபாளையம்,சமுத்திரம்,புதுப்பாளையம்,கொங்கணாபுரம் வரை இயக்கப்படுகிறது.

 

சங்ககிரி,கன்னியாம்பட்டி வழியாக இயக்கப்பட்ட பேருந்து,தற்போது கன்னியாம்பட்டி,புதுப்பாளையம்,சமுத்திரம்,சித்திரபாளையம்,ஜலகண்டாபுரம் வரை செல்லும். ஓமலூர்,முத்துநாயக்கன்பட்டி,சேலம் நகரப்பேருந்து நிலையம் சேவை, தற்போது ஓமலூர்,சடைமாரியம்மன் கோவில்,சேலம் நகரப்பேருந்து நிலையம் வரை தொடரும்.

ஆத்தூர்,திம்மநாயக்கன்பட்டி,மங்களபுரம் சேவை,இப்போது ஆத்தூர்,அரசநத்தம்,ஊராண்டிவளசு திம்மநாயக்கன்பட்டிமங்களபுரம் வரை விரிவடைகிறது.மேச்சேரி,மேட்டூர் பேருந்து,தற்போது மேச்சேரி,மல்லியகுந்தம் பிரிவு,ஊஞ்சகரடு,கச்சராயனூர் வழியாக மேச்சேரி வரை இயக்கப்படுகிறது.

மேலும் சில பேருந்துகள் வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன:

ஏற்காடு பட்டிபாடி வேலூரில் இருந்து கொண்டைலூர் வழியாக சொனப்பாடி வரையும்.சேலம் நகரப்பேருந்து நிலையம்,உயிரியல் பூங்கா,செட்டிச்சாவடி,இப்போது டேனிஷ்பேட்டை,பெரிய வடகம்பட்டி வரையும் மேச்சேரி,மேட்டூர்,இப்போது மேட்டூர்,மேச்சேரி வரை.மூலக்காட்டிமேச்சேரி,இப்போது மேச்சேரி,மல்லியகுந்தம் பிரிவு ஊஞ்சகரடு,கச்சராயனூர் வரை மாற்றப்பட்டுள்ளது .

இந்த புதிய போக்குவரத்து சேவைகள் இன்று முதல் பயணிகளுக்காக தொடங்கி வைக்கப்பட்டு, மக்களுக்கு பயண வசதிகளை மேலும் மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.