இந்திய பட்டயக் கணக்காளர் படிப்புக்கான தேர்வில் இதுவரை இல்லாத அளவில் 20,446 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். icaiexam.icai.org, icai.org. icai.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் 13,000 முதல் 15,000 பேர் வரை மட்டுமே தேர்ச்சிப் பெற்ற நிலையில் தற்போது அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். முதல் தொகுதி தேர்வில் 74,887 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 20,479 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
இரண்டாம் தொகுதி தேர்வை 58,891 மாணவர்கள் எழுதிய நிலையில், 21,408 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.



-SXgDfGgJfO.jpg)