ட்ரெண்டிங்

சிறைச்சாலைக்குள் கஞ்சா எடுத்துச் செல்ல முற்பட்ட 2 பேர் கைது!

ரஸ்க் பாக்கெட்டுகளுக்குள் கஞ்சாவை மறைத்து சேலம் மத்திய சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முற்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

சிறைவாசிகளைச் சந்திக்க வருபவர்கள் திண்பண்டங்களைக் கொண்டு வருவது வழக்கம். அதனை சோதனை செய்த பிறகே, சிறை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில், சேலம் மத்திய சிறைச்சாலையில் சிறைவாசியைச் சந்தித்த வந்தவர்கள் வைத்திருந்த பாக்கெட்டுகள் லேசாகப் பிரிக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.

 

உடனடியாக அந்த பாக்கெட்டுகளைப் பிரித்து சோதனை செய்த போது, அதில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அஜித்குமார் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேரை கைது செய்து, 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.