சேலம் மாவட்டம், ஆத்தூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூபாய் 2 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.
ஆத்தூர், திட்டக்குடி, தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல், கள்ளக்குறிச்சி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து 385 விவசாயிகள், 2,633 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். மஞ்சளின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், விரலிமஞ்சள் குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் 14,212 ரூபாய்க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் 17,222 ரூபாய்க்கும் ஏலம் போனது.
14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 17,000 ரூபாய்க்கு ஒரு குவிண்டால் மஞ்சள் விலை போனதாக விவசாயிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.


