ட்ரெண்டிங்

சேலம் வழியாக மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை!

 

கோவை- பெங்களூரு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை வரும் டிசம்பர் 30- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிலையில், கோவை- பெங்களூரு வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

 

தினசரி காலை 05.00 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக காலை 11.30 மணியளவில் பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

மறுமார்க்கத்தில், பிற்பகல் 01.40 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில், இரவு 08.00 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜவுளி நகரங்களில் இருந்து ஐ.டி. நகரத்துக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படவுள்ளதால், தொழில்துறையினர், ஐ.டி. ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

ஏற்கனவே, சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது